சூறாவளியால் லிபியாவில் 5500பேர் உயிரிழப்பு
2023-09-14 14:43:54

டேனியல் சூறாவளியின் பாதிப்பால் லிபியாவின் கிழக்குப் பகுதியில் 5500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 10 ஆயிரம் பேர் காணவில்லை என்று லிபிய சுகாதார அமைச்சகம் 13ஆம் நாள் தெரிவித்தது.

மேலும், சுமார் 30 ஆயிரம் பேர் வீடுவாசலின்றி, அடிப்படை பொருட்களின் கடும் பற்றாக்குறை உள்ள நிலையில் அல்லல்பட்டு வருகின்றனர்.