ஐரோப்பிய ஒன்றியத்தின் மானிய எதிர்ப்பு விசாரணைக்கு சீனா பதில்
2023-09-14 17:04:57

சீன மின்சார வாகனங்களின் மீது மானிய எதிர்ப்பு விசாரணையை மேற்கொள்ள உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் செப்டம்பர் 14ஆம் நாள் பதிலளிக்கையில், இதன் மீது கவனத்தையும் மனநிறைவின்மையையும் சீனா தெரிவிப்பதாகக் கூறினார். ஐரோப்பிய ஒன்றியம் திட்டப்படி மேற்கொள்ளும் விசாரணை நடவடிக்கை, சமமான போட்டியின் பெயரில் சொந்தமான தொழிலைப் பேணிக்காக்கும் பாதுகாப்பு வாதச் செயலாகும். ஐரோப்பிய ஒன்றியம் உள்பட உலகின் வாகனத் தொழில் சங்கிலியை இது கடுமையாகச் சீர்குலைப்பதோடு, சீன-ஐரோப்பிய வர்த்தக உறவுக்குப் பாதிப்பையும் ஏற்படுத்தும் என சீனா கருதுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், ஐரோப்பிய ஒன்றியம் ஒட்டுமொத்த நிலைமையைக் கருத்தில் கொண்டு சீனாவுடன் கலந்தாய்வு நடத்தி, இருதரப்பு மின்சார வாகனத் தொழிலின் கூட்டு வளர்ச்சிக்கு சமமானச் சந்தை சூழலை உருவாக்கி, வர்த்தகப் பாதுகாப்பு வாதத்தை எதிர்க்க வேண்டும் என சீனா வேண்டுகோள் விடுப்பதாகவும், ஐரோப்பிய தரப்பின் செயலைத் தொடர்ந்து கவனிக்கும் சீனா, சீனத் தொழில் நிறுவனங்களின் சட்டப்பூர்வ உரிமை நலன்களை உறுதியுடன் பேணிக்காப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.