பிரேசில் அதிகார நிறுவனங்களைத் தாக்கியதாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கு விசாரணை துவக்கம்
2023-09-14 15:32:46

வன்முறையால் நாட்டின் அதிகார நிறுவனங்களைத் தாக்குதல் நடத்தியது தொடர்பாக, பிரேசில் உச்ச நீதிமன்றம் 13ஆம் நாள் விசாரணை செய்யத் துவங்கியது. ஆயுத ஏந்தி குற்றம் செய்தல், மக்களாட்சி மற்றும் சட்ட ஒழுங்கை வன்முறையால் சீர்குலைத்தல், பொது சொத்துகளை சேதப்படுத்துதல் முதலிய குற்றச்சாட்டுகளால் பிரேசில் தலைமை வழக்கறிஞர் அலுவலகம் முதல் தொகுதியாக 4 பேர் மீது வழக்கு தொடுத்தது.

மேலும், வன்முறையால் நாட்டின் அதிகார நிறுவனங்களைத் தாக்குதல் நடத்திய நூற்றுக்கணக்கான சந்தேகிக்கப்படுபவர்கள் உடன்படிக்கை மூலம் குற்றவியல் வழக்கைத் தவிர்க்க விரும்புவதாக வழக்கறிஞர் மூலம் தெரிவித்தனர்.

இவ்வாண்டின் ஜனவரி 8ஆம் நாள் பிரேசில் முன்னாள் அரசுத் தலைவர் போல்சனாரோவின் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்கள் அந்நாட்டின் அரசுத் தலைவர் மாளிகை, நாடாளுமன்ற கட்டிடம், உச்ச நீதி மன்றம் ஆகியவற்றின் மீது வன்முறையால் தாக்குதல் நடத்தி பல வசதி உபகரணங்களை அழித்து ராணுவத் துறையினர்களுடன் மோதலுக்குள்ளனர்.