லிபியாவிற்கான உதவி:உலகச் சுகாதார அமைப்பு
2023-09-15 10:39:44

சூறாவளி மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லிபியாவிற்கு உதவ 20 இலட்சம் அமெரிக்க டாலர்களை அவசர நிவாரண தொகையை வழங்குவதாக உலகச் சுகாதார அமைப்பு 14ஆம் நாள் அறிவித்தது.

இது முன் கண்டிராத பேரழிவு என்று உலகச் சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் தெட்ரோஸ் ஜெனீவாவில் உள்ள அவ்வமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். 15ஆம் நாள் லிபியாவின் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 28 டன் மருத்துவ மற்றும் அவசர நிவாரணப் பொருட்கள் சென்று சேரும். இவற்றைத் தவிர, அவசர மருத்துவ குழுக்களுக்கான வலையமைப்பு ஒன்றும் தொங்கி வைக்கப்பட்டுள்ளது என்று தெட்ரோஸ் தெரிவித்தார்.