© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
ரஷிய வெளியுறவு அமைச்சகம் 14ஆம் நாள் வெளியிட்ட தகவலின்படி, ரஷியாவுக்கான அமெரிக்க தூதரகத்தின் முதன்மை செயலாளர் ஜெஃப்ரி சில்லின், இரண்டாம் செயலாளர் டேவிட் பெர்ன்ஸ்டீன் ஆகியோரின் செயல்கள் தூதாண்மை அதிகாரியின் அடையாளத்துக்குப் பொருத்தமற்றதாக உள்ளன. எனவே, அவர்கள் இருவரையும் வரவேற்கப்படாதவர்களாக அறிவிக்கப்படுவதாகவும், அவர்கள் 7 நாட்களுக்குள் ரஷியாவிலிருந்து வெளியேற வேண்டும் என ரஷிய தரப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில், ரஷியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ரஷிய உள்விவகாரங்களில் தலையிடுவது உள்ளிட்ட சட்டவிரோதமான செயல்களை ரஷியா ஏற்றுக் கொள்ளாது என்றும், ரஷியா அவற்றை உறுதியாகத் தடுக்கும் என்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.