லிபியாவில் சூறாவளி மற்றும் வெள்ளத்தால் உயிரிழந்த எண்ணிக்கை:11300
2023-09-15 14:37:37

லிபியாவின் செம்பிறைச் சங்கம் 14ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, சூறாவளி மற்றும் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட லிபியாவின் டெர்னா நகரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 300 ஆக உயர்ந்துள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணவில்லை. உள்ளூர் அவசர நிலை மற்றும் முதலுதவி மையம் அதே நாளில் டெர்னா நகரில் உயரிய அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தது.