ஆகஸ்டு திங்களில் சீனப் பொருளாதாரம் மீட்சி
2023-09-15 14:40:27

2023ஆம் ஆண்டின் ஆகஸ்டு திங்கள்  தேசிய பொருளாதாரச் செயல்பாட்டு நிலைமையைச் சீனத் தேசியப் புள்ளிவிபரப் பணியகம்  15ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் வெளியிட்டது. அதில், ஆகஸ்டு திங்களில், தொழில்துறை உற்பத்தி விரைவுபடுத்தப்பட்டு, உபகரணங்கள் உற்பத்தித் துறையின் வளர்ச்சி வேகம் உயர்ந்துள்ளது. சேவைத் துறையின் வளர்ச்சியும் வேகமாக அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  நுகர்வுப்பொருட்களின் மொத்த சில்லறை விற்பனைத் தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.6 விழுக்காடு அதிகமாகும். வேலைவாய்ப்பு நிலைமை ஒட்டுமொத்தமாக நிலையாக உள்ளது என்றும், கணக்கெடுப்பின் படி, நகரப்புறங்களில் வேலையின்மை விகிதம் முந்தைய மாதத்தைக் காட்டிலும் குறைந்து 5.2 விழுக்காடாக உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.