ஐ.நா பொது பேரவையின் 78ஆவது கூட்டத் தொடரின் பொது விவாதத்தில் ஹான்செங் பங்கெடுப்பு
2023-09-15 17:29:30

சீனத் துணை அரசுத் தலைவர் ஹான்செங், செப்டம்பர் 18 முதல் 23ஆம் நாள் வரை ஐ.நா பொது பேரவையின் 78ஆவது கூட்டத் தொடரின் பொது விவாதத்தில் பங்கெடுக்கவுள்ளார். அப்போது, ஐ.நாவின் தொடரவல்ல வளர்ச்சி இலக்கு உச்சிமாநாடு, காலநிலை லட்சிய உச்சிமாநாடு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் அவர் பங்கெடுத்து, ஐ.நா தலைமைச் செயலாளர், ஐ.நாவின் 78வது பொது பேரவைத் தலைவர், தொடர்புடைய நாடுகளின் தலைவர்கள் முதலியோருடன் இரு தரப்பு சந்திப்பு நடத்தவுள்ளார் என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் செப்டம்பர் 15ஆம் நாள் தெரிவித்தார்.