வேறு நாடுகளின் மீது இணையத் தாக்குதல் தொடுத்து வருகின்ற அமெரிக்கா
2023-09-15 19:51:00

சீனாவின் வடமேற்கு பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தின் மீதான இணையத் தாக்குதல் பற்றிய புலனாய்வு அண்மையில் பெரும் முன்னேற்றத்தைப் பெற்றது. சீனத் தரப்பினர், “Second Date”என்னும் வேவு மென்பொருளை ஆய்வு செய்வதன் மூலம், இத்தாக்குதலின் பின்னணியிலுள்ள அமெரிக்கத் தேசிய பாதுகாப்புப் பணியகத்தின் பணியளர்களைக் கண்டறிந்தனர். வேறு நாடுகளின் மீது அமெரிக்க அரசு இணையத் தாக்குதல் தொடுப்பதற்கான மற்றொரு வலிமைமிக்க சான்று இதுவாகும்.

“Second Date”என்னும் மென்பொருள், அமெரிக்கத் தேசிய பாதுகாப்புப் பணியகம் ஆராய்ந்து தயாரித்த இணையவழி வேவு மென்பொருளாகும். மேலும், இப்பணியகத்தின் தொலைதூர கட்டுப்பாட்டிலுள்ள Jump Server சாதனங்களையும் சீனத் தரப்பினர் கண்டறிந்தனர். இச்சாதனங்கள் பெரும்பாலும் ஜெர்மனி, ஜப்பான், தென் கொரியா, இந்தியா, சீனாவின் தைவான் முதலிய பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் குறிப்பிட்ட இணைய பயனாளர்களிடமிருந்து அமெரிக்கா வேவு பார்த்து, எப்போதும் இணையத் தாக்குதல் தொடுக்க முடியும்.

உலகளவில் உளவுகளைப் பெறுவதற்கான பெரும் முறைமையை அமெரிக்கா மிக முன்னதாக உருவாக்கியுள்ளது. 2013ஆம் ஆண்டு முதல், அமெரிக்காவின் ஒற்றாடல் செயல்கள் தொடர்ந்து வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

பல்வேறு நாடுகளின் இணையப் பாதுகாப்புக் கட்டுமானத்திறன் மேம்பட்டு வருவதுடன், இணையத் துறையில் அமெரிக்காவின் வெறுப்பூட்டும் மேலாதிக்க செயல்கள் தோல்வி அடையும்.