தொடர்ந்து 10ஆவது முறையாக வட்டியை உயர்த்திய ஐரோப்பிய மத்திய வங்கி
2023-09-15 10:38:54

ஐரோப்பிய மத்திய வங்கி 14ஆம் நாள் நாணயக்கொள்கை கூட்டத்தை நடத்தியது. இதில், யூரோ பிரதேசத்திலுள்ள மூன்று முக்கிய வட்டி விகிதங்களை 25 அடிப்படை புள்ளிகளுடன் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை முதல் ஐரோப்பிய மத்திய வங்கி தொடரந்து 10 ஆவது முறையாக வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. இக்காலத்தில் ஐரோப்பிய மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தினை மொத்தமாக 450 அடிப்படை புள்ளிகள் அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிட்டத்தக்கது.