கல்வியின் மூலம் நாட்டின் கட்டுமானத்தை முன்னேற்றுவது என்னும் ஷி ச்சின்பிங்கின் முக்கிய கட்டுரை
2023-09-15 17:53:37

கல்வியின் மூலம் நாட்டின் கட்டுமானத்தை முன்னேற்றுவது என்ற தலைப்பில், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவரும், மத்திய இராணுவ ஆணையத்தின் தலைவருமான ச்சின்பிங்கின் முக்கிய கட்டுரை, செப்டம்பர் 16ஆம் நாள் ச்சியூஷி இதழில் வெளியிடப்படவுள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாட்டுக்குப் பிறகு, கல்வியை, நாடு மற்றும் கட்சி வளர்ச்சிக்கான முக்கிய திட்டமாக கட்சியின் மத்திய கமிட்டி கருத்தில் கொண்டு, கல்விமயமாக்கத்தை விரைவுபடுத்துவது, கல்வி துறையில் முன்னணி நாட்டைக் கட்டியமைப்பது ஆகிய முக்கிய கொள்கைகளை வகுத்துள்ளது. தற்போது, உலகளவில் மிகப் பெரிய கல்வி அமைப்புமுறையை சீனா கட்டியமைத்துள்ளது. கல்விமயமாக்க வளர்ச்சி நிலை, உலகத்தின் முன்னணியில் உள்ளது என்று இக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேசத்தின் மாபெரும் மறுமலர்ச்சிக்குப் பொறுப்பேற்கும் திறமைசாலிகளை வளர்க்க வேண்டும். உயர்தரக் கல்வி அமைப்புமுறையின் கட்டுமானத்தை விரைவுபடுத்த வேண்டும். கல்வி சேவையின் உயர்தர வளர்ச்சி திறனை பன்முகங்களிலும் மேம்படுத்த வேண்டும். சீர்தருத்தம் மற்றும் புத்தாக்கத்தை ஆழமாக்குவதில் கல்வி வளர்ச்சியின் உயிராற்றலை எழுப்ப வேண்டும். சீனக் கல்வியின் சர்வதேச செல்வாக்கை வலுப்படுத்த வேண்டும். உயர் கல்வி அறிவு மற்றும் திறன்மிக்க ஆசிரியர்கள் அணியை உருவாக்க வேண்டும் என்றும் இக்கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.