கேரளாவில் நிபா வைரஸால் 2 பேர் உயிரிழப்பு
2023-09-15 10:13:13

கேரளா மாநிலத்தில் நிபா வைரஸ் பாதிப்பால் 2பேர் உயிரிழந்துள்ளதை இந்தியச் சுகாதார அமைச்சர் மாண்டவியா 13ஆம் நாள் உறுதிப்படுத்தியுள்ளார். இதனிடையில், நோய் தடுப்புப் பணியை மேற்கொள்ள, பாதிக்கப்பட்ட பகுதிக்குச் மருத்துவ நிபுணர்கள் குழு ஒன்றை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

தற்போது, நிபா வைரஸ் தொற்றுநோய் பற்றிய முன்னெச்சரிக்கையை கேரளா வெளியிட்டுள்ளது. 700க்கும் அதிகமானோருக்கு வைரஸ் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உயிரிழப்பு விகிதம் முறையே 75விழுக்காடு மற்றும் 60விழுக்காடாக இருக்கும். இதுவரை, இவ்வைரஸுக்கான தடுப்பூசி மற்றும் பயனுள்ள சிகிச்சை வழிமுறைகள் கண்டறியப்படவில்லை.