சீன-வெனிசூலா நட்புக்கான புதிய உந்து ஆற்றல்
2023-09-15 15:02:03

வெனிசுலா அரசுத் தலைவர் நிக்கோலஸ் மதுரோ மோரோஸ் 14ஆம் நாள், சீனப் பயணத்தை முடித்துக் கொண்டுள்ளார். சீனாவில் அவர் மேற்கொண்ட மூன்றாவது அரசுமுறைப் பயணம் இதுவாகும். அவரது சீனப் பயணம் மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக லத்தீன் அமெரிக்க செய்தி ஊடகங்கள் மதிப்பிட்டுள்ளன.

செப்டம்பர் 13ஆம் நாள், சீன-வெனிசுலா அரசுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையின் போது சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பேசுகையில், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி, சீனாவின் பெரும் வளர்ச்சிக்கான முக்கிய அடித்தளம் ஆகும். அவ்வகையில், வெனிசூலா சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்க சீனா ஆதரவளிக்கிறது எனக் குறிப்பிட்டதோடு, வெனிசூலாவுடன் தொடர்புடைய அனுபவங்களைச் சீனா பகிர்ந்துகொள்ள விரும்புவதாகவும் தெரிவித்தார்.

7 நாட்கள் நீடித்த சீனப் பயணத்தின் போது, மதுரோ சீனாவில் 4 பிரதேசங்களில் பயணித்தார். சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புக்கான முன்மாதிரி நகரமான ஷென்சென் நகரில் அவர் முதலில் பயணம் மேற்கொண்டார். அப்போது, சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்கவது தொடர்பாக, சீனாவின் முன்னேறிய அனுபவங்களைக் கற்றுக் கொள்ளும் வகையில், அடுத்த சில வாரங்களில், மேலதிகமான பிரதிநிதிக் குழுக்களை சீனாவுக்கு அனுப்ப உள்ளதாக அவர் அறிவித்தார். மேலும், நவம்பர் திங்களில், சீனாவின் ஷாங்காய் மாநகரில் நடைபெறவுள்ள சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியில் கலந்து கொள்ளும் பொருட்டு வெனிசூலா தொழில் முனைவோர் மற்றும் தயாரிப்பு தொழில் நிறுவன பிரதிநிதிக் குழுக்களை அனுப்பும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையில் தொடர்புடைய தரவுகளின்படி, 2023ஆம் ஆண்டின் முற்பாதியில், சீன-வெனிசூலா சரக்கு வர்த்தகத் தொகை 191 கோடியே 80 இலட்சம் அமெரிக்க டாலராகும். இது, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 16 விழுக்காடு உயர்ந்துள்ளது.

வெனிசூலாவின் சிறப்பு தன்மை வாய்ந்த உற்பத்திப் பொருட்களின் இறக்குமதியை விரிவாக்க சீனா விரும்புகிறது என்று இரு நாட்டுத் தலைவர்களின் பேச்சுவார்த்தையில் கூறப்பட்டுள்ளது.

தவிரவும், சீனா ஆரம்பித்த சர்வதேச சந்திர அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தின் ஒத்துழைப்புத் திட்டத்தில் வெனிசூலா இவ்வாண்டின் ஜூலை திங்களில் சேர்ந்தது. இது, இத்திட்டத்தில் சேர்ந்த முதலாவது இலத்தீன் அமெரிக்க நாடாக விளங்குகிறது. இது, சீனாவும் வெனிசூலாவும் கூட்டு வளர்ச்சிக்கான நல்ல கூட்டாளிகளாகும் என்பதை வெளிகாட்டியுள்ளன.