© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
நார்த்ஈஸ்டர்ன் பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட 100வது ஆண்டுநிறைவை முன்னிட்டு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், செப்டம்பர் 15ஆம் நாள் இப்பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் பதில் கடிதம் அனுப்பி, மனமார்ந்த வாழ்த்து மற்றும் வணக்கத்தைத் தெரிவித்தார்.
புதிய துவக்கப் புள்ளியில் நின்று, நார்த்ஈஸ்டர்ன் பல்கலைக்கழகம், புகழ்மிக்க நாட்டுப்பற்று பழக்கத்தை வெளிக்கொணர்ந்து, சீர்திருத்தம் மற்றும் புத்தாக்கத்தைத் தொடர்ந்து முன்னேற்ற வேண்டும் என்றும், நாட்டின் நெடுநோக்கு தேவைக்கிணங்க, உயர் கல்வியறிவு கொண்ட திறமைசாலிகளைப் பயிற்றுவித்து, உயர்நிலை அறிவியல் சாதனைகளைப் படைத்து, வடக்கிழக்கு பிரதேசத்தின் மறுமலர்ச்சியையும், சீனப் பாணியுடைய நவீனமயமாக்கத்தையும் முன்னெடுப்பதற்கு மேலதிக புதிய பங்கு ஆற்ற வேண்டும் என்றும் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.