ஐ.நா சுற்றுச்சூழல் திட்ட அலுவலகச் செயல் தலைவரின் பேட்டி
2023-09-16 16:38:17

பசுமை வளர்ச்சியில் சீனாவின் செயல்பாடு, மனிதருக்கும் இயற்கைக்குமிடையில் நல்லிணக்கத்தை நனவாக்கும் சீன நவீனமயமாக்கப் பாதை முதலியவை குறித்து, ஐ.நா சுற்றுச்சூழல் திட்ட அலுவலகச் செயல் தலைவர் அன்டர்சன் அம்மையார், சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டியளித்தார்.

அவர் கூறுகையில், “தெளிவான தண்ணீர் மற்றும் பசுமை மலைகள், தங்கம் மற்றும் வெள்ளியைப் போல மதிப்புமிக்கவை”என்ற கருத்து, கவிதையைப் போல் அழகாக உள்ளது. உயிரினத் தினத்தை நிர்ணயித்த சீனா, நாளடவிலான கவனத்தை ஈர்த்துள்ளது. தொடரவல்ல வாழ்க்கை குறித்த சீனப் பாணியுடைய வெளிப்பாடு, இதுவே ஆகும். நமக்கு மேலும் சிறந்த வளர்ச்சி பாதை உண்டு. இயற்கையுடன் நல்லிணக்கமாக வாழ்ந்து, மாசுபாட்டற்ற உலகில் வாழப் பாடுபட வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்து கொண்டுள்ளனர் என்று அன்டர்சன் தெரிவித்தார்.