ஹாங்ச்சோ ஆசிய விளையாட்டுப் போட்டி கிராமம் திறப்பு
2023-09-16 17:04:57

19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி கிராமத்தின் திறப்பு விழாவும், சீன பிரதிநிதிக் குழுவுக்கான வரவேற்பு விழாவும் ஹாங்ச்சோ மாநகரில் 16ஆம் நாள் நடைபெற்றது.

ஹாங்ச்சோ ஆசிய விளையாட்டுப் போட்டி கிராமம் திறக்கப்பட்டதோடு, 5 கிளை கிராமங்களும், 3 விளையாட்டு வீரர் விடுதிகளும் திறக்கப்பட்டுள்ளன.

ஹாங்ச்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக் காலத்தில், இக்கிராமம், 20 ஆயிரத்துக்கு மேலான விளையாட்டு வீரர்கள், பிரதிநிதிக் குழுக்களின் அதிகாரிகள், தொழில் நுட்ப அதிகாரிகள், செய்தி ஊடகப் பணியாளர்கள் ஆகியோருக்கு உணவு, போக்குவரத்து, மருத்துவம் முதலி சேவைகளை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.