77 நாடுகள் குழு மற்றும் சீனா உச்சி மாநாடு நிறைவு
2023-09-17 16:31:09

கியூபாவில் நடைபெற்ற 77 நாடுகள் குழு மற்றும் சீனா உச்சி மாநாடு 16ஆம் நாள் நிறைவடைந்தது. இரு நாட்கள் நீடித்த விவாதத்திற்கு பிறகு, அனைத்து பிரதிநிதிகளும், ஹவானா அறிக்கையை அங்கீகரித்தனர். இவ்வுச்சி மாநாட்டில் கலந்துகொண்ட பிரதிநிதிகள், சீனா முன்மொழிந்த உலக வளர்ச்சி முன்மொழிவுக்குப் பாராட்டு தெரிவித்தனர். தவிரவும், எண்ணியல் ஒத்துழைப்பு மற்றும் அறிவியல் ஒத்துழைப்பின் மூலம், தெற்கு பகுதியிலுள்ள நாடுகளின் வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஆப்பிரிக்க லீக் நடப்பு தலைமை நாடான கொமொரொஸ் அரசுத் தலைவர் அசாலி அசுமணி கூறுகையில்,

எண்ணியல் ஒத்துழைப்பின் மூலம் உலக பொருளாதாரத்துக்கு ஊக்கமளிப்பது குறித்து உலகளவில் சீனாவின் முன்மொழிவுக்கு நாங்கள் பாராட்டு தெரிவித்துள்ளோம். இது ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை என்ற ஆக்கப்பணியின் முக்கிய பகுதியாகும் என்றார்.