அன்னிய முதலீட்டை ஈர்த்து வரும் சீனச் சந்தை
2023-09-17 19:17:34

சீனாவின் நுகர்வு சந்தை, உலகில் மாபெரும் ஈர்ப்பாற்றல் கொண்டுள்ளது என்பதை, 15ஆம் நாள் வெளியிடப்பட்ட ஆகஸ்ட் பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் காட்டியுள்ளன. ஆகஸ்ட் திங்கள், சீனச் சமூக நுகர்வுப் பொருட்களின் மொத்த சில்லறை தொகை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 4.6 விழுக்காடு அதிகரித்தது. உணவு, தங்கும் விடுதி, போக்குவரத்து முதலிய சேவைத் துறைகளிலும் சீன மக்களின் நுகர்வு அதிகரித்து வருகிறது. எண்ணியல் நுகர்வு மற்றும் பசுமை நுகர்வு, சீன நுகர்வு சந்தையின் புதிய மேம்பாட்டுப் போக்காக மாறி வருகின்றன.

இவ்வாண்டில் உலகின் பொருளாதார மீட்சி, மந்தமாக உள்ள நிலையில், சீனப் பொருளாதாரம், தொடர்ந்து மீட்சி அடைந்து, உலக பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய உந்து சக்தியாக உள்ளது. அதனால், நாடு கடந்த தொழில் முனைவோர் பலர், அடுத்த சந்தை வாய்ப்புக்காக, சீனாவையே மீண்டும் தேர்ந்தெடுத்து வருகின்றனர்.

மேம்பட்டு வரும் சீனாவின் மாபெரும் சந்தை, நாடு கடந்த தொழில் நிறுவனங்களுக்கு நிலையான நன்மைகள் அளிக்கக் கூடியது. கடந்த 5 ஆண்டுகளில், சீனாவிலுள்ள அன்னிய முதலீட்டின் இலாப விகிதம், 9.1 விழுக்காட்டை எட்டி, ஐரோப்பா மற்றும் அமெரிக்காவிலுள்ள 3 விழுக்காட்டை விட அதிகம். தவிரவும், இவ்வாண்டில் மென்மேலும் அதிகமான வெளிநாட்டுத் தொழில் நிறுவனங்கள், தங்கள் ஆய்வு மையங்களை, சீனாவில் கட்டியமைத்து வருகின்றன. மாபெரும் சந்தை, முழுமையான தொழில் முறைமை, அதிகமான திறமைசாலிகள் முதலியவை, இதற்கான காணரம்.

சீனா, உலகளவில் நாடு கடந்த தொழில் நிறுவனங்களுக்கு முக்கிய வாய்ப்பை வழங்கும் மிக பெரிய மேடைகளில் ஒன்று என்று மெக்கென்சி நிறுவனம் கருத்து தெரிவித்தது.