77 நாடுகள் குழு மற்றும் சீனா உச்சி மாநாட்டில் சீன பிரதிநிதியின் பங்கு
2023-09-17 16:33:37

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் சிறப்பு பிரதிநிதியும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் நிரந்தர உறுப்பினரும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி ஒழுங்கு பரிசோதனை ஆணையத்தின் பொது செயலாளருமான லீ சி, 77 நாடுகள் குழு மற்றும் சீனா உச்சி மாநாட்டில் 15ஆம் நாள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

தற்போது வளரும் நாடுகளின் சக்தி அதிகரித்து வருகின்றது. அதேவேளை, ஒரு சில நாடுகள் ஒரு தரப்புவாத தடை நடவடிக்கை மேற்கொள்கின்றன. இது வளரும் நாடுகளின் நலனுக்கும் வளர்ச்சிக்கும் தீங்கு விளைவிக்கின்றது. 77 நாடுகள் குழு மற்றும் சீனா, தற்சார்ப்பிலும் தன்வலிமையிலும் ஊன்றி நின்று, மனிதர்களின் கூட்டு மதிப்பைப் பின்பற்றி, உலக அமைதியை கூட்டாகப் பேணிக்காக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.