சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் நடுநிலை வகிக்க வேண்டும்:ஈரான்
2023-09-17 16:32:52

ஈரானிலுள்ள சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் சரிபார்ப்புப் பணியாளர்களுக்கான நியமனத்தை நீக்க ஈரான் அண்மையில் அறிவித்தது. இச்செயல், ஈரானின் மீதான கண்காணிப்புத் திறனைக் கடுமையாகப் பாதிக்கும் என்று சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் 16ம் நாள் தெரிவித்தது.

இது குறித்து, ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கனானி பதிலளிக்கையில், ஈரான், சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்துடன் ஆக்கப்பூர்வ மற்றும் தொடர்ச்சியான தொடர்பை மேற்கொண்ட போதிலும், பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள், சொந்த அரசியல் நோக்கத்துடன், இந்நிறுவனத்தின் செயற்குழு அதிகாரத்தைத் தாறுமாறாகப் பயன்படுத்துகின்றன. ஏற்கெனவே எட்டியுள்ள உடன்படிக்கை கட்டுக்கோப்புக்குள், ஈரான், தொடர்ந்து சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்துடன் ஒத்துழைப்பை மேற்கொள்ளும். இந்நிறுவனம், நடுநிலை வகிப்பது, இன்றியமையாதது என்று சுட்டிக்காட்டினார்.