அமெரிக்க அரசுத் தலைவரின் தேசிய பாதுகாப்பு விவகார ஆலோசகருடன் சந்திப்பு: வாங்யீ
2023-09-18 11:23:23

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும், மத்தியக் கமிட்டியின் வெளிவிவகார ஆணையப் பணியகத் தலைவருமான வாங்யீ, செப்டம்பர் 16ஆம் நாள் முதல் 17ஆம் நாள், மால்டாவில் அமெரிக்க அரசுத் தலைவரின் தேசிய பாதுகாப்பு விவகார ஆலோசகர் ஜேக் சல்லிவனுடன் பல சுற்று பேச்சுவார்த்தையை நடத்தினார்.

சீன-அமெரிக்க உறவை நிதானப்படுத்தி மேம்படுத்துவது குறித்து நேர்மையான, சாராம்ச ரீதியான மற்றும் ஆக்கப்பூர்வமான நெடுநோக்குப் பரிமாற்றத்தை இரு தரப்பினரும் மேற்கொண்டுள்ளனர்.

பாலி தீவில் சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் எட்டியுள்ள முக்கிய ஒத்த கருத்துகளைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தி, உயர் நிலை பரிமாற்றத்தை நிலைநிறுத்த வேண்டும் என்றும்,  ஆசிய-பசிபிக் விவகாரம், கடல் விவகாரம், தூதாண்மைக் கொள்கை ஆகியவை பற்றிய இரு நாட்டுக் கலந்தாய்வுகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டுள்ளனர். இரு நாடுகளுக்கிடையில் மனிதத்தொடர்புக்கு மேலும் ஆதரவு மற்றும் வசதிகளை வழங்கும் நடவடிக்கைகள் பற்றியும் அவர்கள் விவாதித்தனர்.