இந்தியப் பயணத்தை ஒத்திவைக்க கனடா சர்வதேச வர்த்தக அமைச்சர் முடிவு
2023-09-18 10:28:05

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, வரும் அக்டோபர் மாதத்தில் கனடா சர்வதேச வர்த்தக அமைச்சர் மேரி என்ஜியின் தலைமையிலான வர்த்தக பிரதிநிதிக் குழு இந்தியாவில் பயணம் மேற்கொள்ளவிருந்த திட்டத்தை ஒத்திவைக்கப் போவதாக இவ்வமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கோசென்டினோ 15ஆம் நாள் தெரிவித்தார். ஆனால், திட்டம் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் பற்றி அவர் கூறவில்லை.

மேலும், கனடாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தையை இடைநிறுத்தியுள்ளதாக அதே நாள் இந்தியா தெரிவித்தது. தவிர, இந்த வர்த்தக பேச்சுவார்த்தையை மதிப்பீடு செய்ய இடைநிறுத்தம் தேவை என்று இம்மாதத்தின் துவக்கத்தில் கனடா அறிக்கை வெளியிட்டிருந்தது.