15வது சீன-ஆசியான் நிதி ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி மன்றக் கூட்டம்
2023-09-18 19:22:52

15வது சீன-ஆசியான் நிதி ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சி மன்றக் கூட்டம், 18ம் நாள் சீனாவின் நன்நிங் நகரில் நடைபெற்றது. அரசியல் மற்றும் நிதித் துறையைச் சேர்ந்த 300க்கும் அதிகமானோர் அதில் பங்கெடுத்து, சீன-ஆசியான் நிதி ஒத்துழைப்பு பற்றி விவாதித்தனர்.

கடந்த 5 ஆண்டுக்காலத்தில், சர்வதேச தரை மற்றும் கடல் வர்த்தகத்துக்கான சேவை, ஆசியான் நாடுகளில் ரென்மின்பி நாணயப் பயன்பாட்டுப் பரவல், நிதித் தொழில் நுட்பம், நிதி சீர்திருத்தம் மற்றும் புத்தாக்கம் ஆகிய 4 துறைகளில், குவாங் ஷி ச்சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசம் படைத்த முன்னேற்றங்கள், இக்கூட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டன. இதற்கிடையில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவின் 10வது ஆண்டு நிறைவு அறிக்கையை, சீன இறக்குமதி ஏற்றுமதி வங்கி வெளியிட்டுள்ளது. தவிரவும், 50 ஆயிரம் கோடி யுவான் மதிப்புள்ள ஒத்துழைப்பு ஒப்பந்தங்கள் கையொப்பமாகின.