சீன மாற்றுத்திறனாளி சம்மேளனத்தின் 8வது தேசிய மாநாடு துவக்கம்
2023-09-18 18:25:14

சீன மாற்றுத்திறனாளி சம்மேளனத்தின் 8வது தேசிய மாநாடு 18ம் நாள் காலை, பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் துவங்கியது. சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உள்ளிட்ட நாட்டின் தலைவர்கள் இத்துவக்க விழாவில் பங்கெடுத்தனர்.

துணை தலைமை அமைச்சர் டிங் ஷியு ஷியாங், “சீன நவீனமயமாகும் போக்கில் மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும் அருமையான வாழ்க்கையை உருவாக்குவது”என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது தேசிய மாநாடு, மாற்றுத்திறனாளிகளின் சமூகக் காப்புறுதி மற்றும் சேவை அமைப்பு முறை, மாற்றுத்திறனாளி இலட்சியத்தின் வளர்ச்சி முதலியவை குறித்து, கோரிக்கைகளை விடுத்துள்ளது. தொடர்புடைய வாரியங்களின் ஒத்துழைப்புடன், பல்நிலை மாற்றுத்திறனாளி சம்மேளனங்கள், கடமைகளைக் கவனமாக நிறைவேற்ற வேண்டும். மாற்றுத்திறனாளிகள், சுய மரியாதை, நம்பிக்கை மற்றும் வலிமை எழுச்சியுடன், மேலும் அருமையான வாழ்க்கைக்குத் தொடர்ந்து பாடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.