ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தலைமை செய்தி ஊடக மையம் தொடக்கம்
2023-09-18 15:52:24

19வது ஆசிய விளையாட்டுப் போட்டி செப்டம்பர் 23ஆம் நாள் முதல் அக்டோபர் 8ஆம் நாள் வரை சீனாவின் ஹாங்சோ மாநகரில் நடைபெறவுள்ளது. ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான தலைமை செய்தி ஊடக மையம் செப்டம்பர் 18ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக இயங்கத் தொடங்கியுள்ளது. இன்று முதல் அக்டோபர் 8ஆம் நாள் வரை, தினமும் 24 மணி நேர சேவை பதிவு செய்யப்பட்டுள்ள செய்தியாளர்களுக்கு இம்மையத்தில் வழங்கப்படும்.