வங்காள தேசத்தில் முன்பு கண்டிராத கடும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு
2023-09-18 10:50:29

வங்காள தேசத்தின் சுகாதார சேவை இயக்குநரகம் 16ஆம் நாள் வெளியிட்ட தரவின்படி, இவ்வாண்டு தற்போது வரை, வங்காள தேசத்தில் ஒரு லட்சத்து 64ஆயிரத்து 562 டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் பதிவு செய்யப்ட்டுள்ளன. உயிரிழப்பு எண்ணிக்கை 804ஐ எட்டியது. அவற்றில் செப்டம்பரில் மட்டும் 211 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. வங்காள தேசத்தின் வரலாற்றில் முன்பு கண்டிராத மிக கடுமையான டெங்கு காய்ச்சல் பாதிப்பு இதுவாகும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.

டெங்கு காய்ச்சல் பரவலால் அந்நாட்டின் மருத்துவ சிகிச்சைத் துறைக்குப் பெரும் அழுத்தம் திணிக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டெட்ரோஸ் அண்மையில் தெரிவித்தார்.