77 நாடுகள் குழு மற்றும் சீனா உச்சி மாநாட்டின் பங்கு
2023-09-18 18:22:55

77 நாடுகள் குழு மற்றும் சீனா பலதரப்புவாதத்திற்கு உறுதியாக ஆதரவு அளிக்கின்றன. சமநிலையை அடிப்படையாகக் கொண்டு மனிதருக்கு நன்மை புரியும் பலதரப்புவாதத்திற்கு அவை பங்காற்றும் எனஅறு எதிர்பார்ப்பதாக இவ்வுச்சி மாநாட்டில் உரையாற்றிய ஐ.நா தலைமை செயலாளர் குட்ரேஸ் தெரிவித்தார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மாவ் நிங் அம்மையார், 18ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,

77 நாடுகள் குழுவுடன் இணைந்து, உலக தெற்கு பொது எதிர்காலச் சமூகத்தைக் கட்டியமைத்து, கூட்டு வளர்ச்சியின் புதிய யுகத்தை உருவாக்க சீனா விரும்புகின்றது என்றார்.