20ஆவது சீனா-ஆசியான் பொருட்காட்சியின் கையெழுத்திடும் விழா
2023-09-18 10:23:49

செப்டம்பர் 17ஆம் நாள் 20ஆவது சீனா-ஆசியான் பொருட்காட்சியின் கையெழுத்திடும் விழா குவாங்சி சுவாங் இனத்தன்னாட்சிப் பிரதேசத்தின் நானிங் நகரில் நடைபெற்றது. இவ்விழாவில்  470 முதலீட்டு ஒத்துழைப்பு திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் கையொப்பமிட்டன. ஒட்டுமொத்த முதலீட்டுத் தொகை 48730 கோடி யுவானாகும். அவற்றில் உற்பத்தித் துறைக்கான முதலீட்டுத் தொகை, 65 விழுக்காட்டுக்கும் மேல் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.