சீன போதைப் பொருள் தடுப்பு பணி மீது அமெரிக்கா அவதூறு பரப்பக் கூடாது
2023-09-18 19:50:47

அமெரிக்க அரசுத் தலைவர் பைடன் அண்மையில் நாடாளுமன்றத்தில் முன்வைத்த அறிக்கையில், சீனாவை போதை பொருள் தோன்றும் இடம் என்று குறிப்பிட்டிருந்தார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 18ஆம் நாள் கூறுகையில்,

அமெரிக்காவின் கருத்துக்கு எவ்விதச் சான்றுகளும் இல்லை. இது சீனாவின் மீதான அவதூறு பரப்பும் செயல் ஆகும். இதனை சீனா உறுதியாக எதிர்க்கின்றது என்றார்.

போதைப் பொருள் தடுப்பு பணியில் சீனா வெகுவாகக் கவனம் செலுத்தி வருகின்றது. உலகின் 5 விழுக்காட்டு மக்கள் தொகை கொண்ட அமெரிக்கா, உலகின் 80 விழுக்காடான ஓபியாட்ஸ் எனும் பொருட்கள் பயன்படுத்துகின்றது. இதனால், சீனப் போதை பொருள் தடுப்பு பணி குறித்து விமர்சனம் செய்யும் தகுதி அமெரிக்காவுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.