20வது சீனா-ஆசியான் பொருட்காட்சியில் லீ ச்சியாங் பங்கெடுப்பு
2023-09-18 10:14:43

சீனத் தலைமையமைச்சர் லீ ச்சியாங் 17ஆம் நாள் 20வது சீனா-ஆசியான் பொருட்காட்சி, சீனா-ஆசியான் வணிக மற்றும் முதலீட்டு உச்சிமாநாடு ஆகியவற்றின் தொடக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். கம்போடியா, லாவோஸ், மலேசியா மற்றும் வியட்நாம் தலைவர்கள் உள்ளிட்ட ஆசியான் உறுப்பு நாடுகளின் தலைவர்கள், தொழில் மற்றும் வணிகத் துறைப் பிரதிநிதிகள் உள்ளிட்ட சுமார் 1200 பேர் இதில் கலந்து கொண்டனர்.

சீனா-ஆசியான் உறவு, ஆசிய-பசிபிக் பிராந்திய ஒத்துழைப்புக்கான மிக வெற்றிகரமான மற்றும் உயிர் ஆற்றல் மிக்க மாதிரியாக மாறியுள்ளது. பல்வேறு தரப்புகளின் கூட்டு முயற்சியினால் தான், இத்தகைய சாதனைகள் பெறப்பட்டன என்று லீ ச்சியாங் தெரிவித்தார்.