அமெரிக்காவில் மோசமாகி வரும் ஃப்ளாஷ் கொள்ளைகள்
2023-09-19 15:14:24

ஃப்ளாஷ் கொள்ளை குறித்து சமீபத்திய நாட்களில் அமெரிக்காவின் நிறைய இணைய பயனர்கள் சமூக ஊடகங்களில் கோபத்தை தெரிவிக்க பதிவிட்டு வருகின்றனர். சமூக ஊடகம் வழியாக ஒன்றாக சேர்ந்து குழுவாக செயல்பட்டு, கடைகளில் கொள்ளையடித்து வணிகப் பொருட்களுடன் அவசரமாக தப்பி செல்வதற்கு ஃப்ளாஷ் கொள்ளை என அமெரிக்காவில் அழைக்கப்படுகின்றது.

அமெரிக்க சில்லறை விற்பனைக் கூட்டமைப்பு வெளியிட்ட தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டில் அமெரிக்கா முழுவதும் சில்லறை விற்பனைத் தொழில் மீது ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற வழக்குகளின் எண்ணிக்கை, 2021ஆம் ஆண்டில் இருந்ததை விட 26.5விழுக்காடு அதிகமாகும். சில்லறை விற்பனையாளர்கள் இதை எதிர்கொள்வதற்கு, வணிக பொருட்களுக்கு பூட்டுப்போட்டு பாதுகாக்க வேண்டியுள்ளது.

கொள்ளைகள் மோசமாகி வரும் சூழநிலையில், அமெரிக்காவின் காவற்துறை பணியாளர்கள் பற்றாக்குறைப் பிரச்சினையை எதிர்கொண்டு வருகின்றது. அமெரிக்க காவற்துறை நிர்வாக ஆய்வு மன்றம் வெளியிட்ட தரவுகளின்படி, 2022ஆம் ஆண்டில் அந்நாட்டில் பதவியிலிருந்து விலகிய காவற்துறையினர்களின் எண்ணிக்கை 2019ஆம் ஆண்டில் இருந்ததை விட 47விழுக்காடு அதிகமாக இருந்தது.

தவிர, இவ்வாண்டின் ஆகஸ்ட் திங்களில் அமெரிக்காவில் ஃப்ளாஷ் கொள்ளைகள் நிகழ்ந்த எண்ணிக்கை உச்ச நிலை எட்டியது. அதே திங்களில், அமெரிக்காவின் வேலை வாய்ப்பில்லாதவர்களின் விகிதம், 2022ஆண்டின் பிப்ரவரியிலிருந்து மிக உயர்ந்த நிலையில் இருந்தது.

இந்த நிலைமை, அமெரிக்கா சமீபத்தில் பொருளாதாரம் தொடர்பாக வெளியிட்ட சிறந்த தரவுகள் குறியீடுகளுக்கு தெளிவான வேறுபாடுகள் காணப்படுகின்றது.

தவிரவும், அமெரிக்காவில் ஏழைகளுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையில் இடைவெளி மேலும் விரிவாகி வருவதை ஃப்ளாஷ் கொள்ளைகள் வெளிகாட்டியது.