உக்ரைனின் வேளாண் உற்பத்திப் பொருட்களின் கட்டுப்பாடு காலாவதியானது
2023-09-19 10:38:42

ஐந்து ஐரோப்பிய நாடுகளில் உக்ரைனின் நான்கு வேளாண் விளை பொருட்களின் தாராள வர்த்தகம் மீதான ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை செப்டம்பர் 15ஆம் நாள் முடிவுக்கு வந்தது. இந்த தடையை நீட்டிக்க போவதில்லை என்று ஐரோப்பிய ஆணையம் முடிவு செய்தது. இந்த முடிவு குறித்து ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் தெளிவான கருத்து வேறுபாடு உள்ளது.

தங்கள் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில், உக்ரைனின் வேளாண் உற்பத்திப் பொருட்களின் மீதான தடையை நீட்டிப்பதாக போலந்து, ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியா அறிவித்தன. பல்கேரியா ஐரோப்பிய ஆணையத்தின் முடிவை ஏற்றுக்கொண்டுள்ளது. தவிர, ஐரோப்பிய ஆணையத்தின் முடிவுக்கு ருமேனிய தரப்பு வருத்தம் தெரிவித்து, உக்ரைன் தனது வேளாண் உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தும் நிலவரத்தில் கவனிப்பதாக அறிவித்தது.