அன்னிய முதலீடு குறித்து சீனாவின் வரவேற்பு
2023-09-19 18:17:17

சீனாவின் வணிகத் துறை எதிர்பார்ப்பு குறித்து ஷாங்ஹாய் மாநகரிலுள்ள அமெரிக்க வணிக சம்மேளனம் ஆய்வு செய்தது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 19ஆம் நாள் கூறுகையில்,

வலிமையான உறுதிதன்மை, அதிகமான வளர்ச்சி வாய்ப்பு, உயிராற்றல் ஆகியவற்றை சீனப் பொருளாதாரம் கொண்டுள்ளது. மிகப் பெரிய சந்தையும் முழுமையான தொழிற்துறை அமைப்பு முறையும் மாறவில்லை. அன்னிய முதலீட்டை  எப்போதுமே வரவேற்கின்ற சீனா அன்னிய தொழில் நிறுவனங்களுக்கு சிறந்த வணிக சூழலை ஏற்படுத்தும் என்றார்.