சீன-ரஷியா வெளியுறவு அமைச்சர்களின் சந்திப்பு
2023-09-19 11:33:26

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, ரஷிய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவுடன் செப்டம்பர் 18ஆம் நாள் மாஸ்கோவில் சந்திப்பு நடத்தினார்.

வாங்யீ கூறுகையில், சீன-ரஷிய உறவு சீராகவும் நிதானமாகவும் வளர்ச்சியடைந்து, பயன்தரும் ஒத்துழைப்புகள் இடைவிடாமல் ஆழமாகி வருகின்றன. சுதந்திரமான தூதாண்மை கொள்கையைப் பின்பற்றுகின்ற இரு நாடுகள், நெடுநேக்கு ஒத்துழைப்புகளைத் தொடர்ந்து வலுப்படுத்துவதன் மூலம், உலக பலதுருவமயமாக்கப் போக்கை முன்னேற்றும் என்றார்.

லாவ்ரோவ் கூறுகையில், சீனாவுடன் இணைந்து, பொருளாதார மற்றும் வர்த்தகம், மானுடவியல், விளையாட்டு, இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்புகளை ஆழமாக்க வேண்டும். மேலும், மாற்றங்கள் காணப்பட்ட சிக்கலான சர்வதேச சூழ்நிலையில், ஐ.நா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உள்ளிட்ட பலதரப்புக் கட்டுக்கோப்புக்குள், இரு நாடுகள் ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாடுகளைக் கூட்டாகப் பேணிக்காக்க வேண்டும் என்றார்.