ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தற்காலிகத் தலைவர் ஹாங்ச்சோவுக்கு வருகை
2023-09-19 19:10:49

ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் தற்காலிகத் தலைவர் ராஜா ரந்திர் சிங், 19ஆம் நாள் ச்சே ஜியாங் மாநிலத்தின் ஹாங்ச்சோ நகரைச் வந்தடைந்தார். நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டியின் துவக்க விழாவில் அவர் உரைநிகழ்த்தவுள்ளார். ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலின் சார்பில், அவர் தொடர்புடைய நிகழ்ச்சிகளிலும் பங்கெடுக்கவுள்ளார்.

வரலாற்றில் முன் கண்டிராத மிகச் சிறந்த ஆசிய விளையாட்டுப் போட்டியை, ஹாங்ச்சோ நகர் நடத்தும் என்று ரந்திர் சிங் பேட்டியளித்தார்.

ஆசிய ஒலிம்பிக் கவுன்சிலைச் சேர்ந்த 45 நாடுகள் மற்றும் பிரதேசங்களின் ஒலிம்பிக் ஆணையங்கள், ஹாங்ச்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க உள்ளன. விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டி, மிக உயர்ந்த பதிவை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.