3வது ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை சர்வதேச ஒத்துழைப்பு மன்றக் கூட்டம்
2023-09-19 17:34:22

ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை சர்வதேச ஒத்துழைப்பின் 3வது மன்றக் கூட்டம், வரும் அக்டோபர் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது என்று சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 19ம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், ஒன்றுக்கொன்று தொலைத் தொடர்பு, பசுமை வளர்ச்சி, எண்ணியல் பொருளாதாரம் ஆகிய 3 உயர் நிலை மன்றக் கூட்டங்களும், தொழில் முனைவோர் கூட்டமும் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுவரை, 110க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளின் பங்கெடுப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.