வேளாண் விளை பொருட்களுக்கான ஏற்றுமதி தடை ஓராண்டு நீட்டிப்பு:புதின்
2023-09-19 14:00:16

ரஷிய செய்தி நிறுவனம் 18ஆம் நாள் வெளியிட்ட செய்தியின் படி, ரஷிய அரசுத் தலைவர் விளாடிமிர் புதின் வேளாண் விளை பொருட்களுக்கான ஏற்றுமதி தடையை 2024 டிசம்பர் 31 தேதி வரை மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்க உத்தரவிட்டுள்ளார்.

ரஷியாவின் வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான ஏற்றுமதி தடை 2014ஆம் ஆண்டின் ஆகஸ்டு 6ஆம் நாள் வெளியிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. கிரிமியன் பிரச்சினை காரணமாக ரஷியா மீது பொருளாதாரத் தடைகளை விதித்த நாடுகளுக்கும் ஆதரவு அளிக்கின்ற நாடுகளுக்கும் இந்த ஏற்றுமதி தடை விதிக்கப்படுகின்றது.