அதிகரித்து வரும் சீன-ஆசியான் தொடர்பும் ஒத்துழைப்பும்
2023-09-20 17:08:13

20ஆவது சீன-ஆசியான் பொருட்காட்சியும் சீன-ஆசியான் வர்த்தக மற்றும் முதலீட்டு உச்சி மாநாடும் 19ஆம் நாள் வெற்றிகரமாக நிறைவடைந்தன. இருதரப்புறவுக்கு இதன் முக்கியத்துவம் என்ன? எதிர்காலத்தில் இருதரப்புறவின் வளர்ச்சி என்ன? இவை குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் மாவ் நிங் அம்மையார் 20ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில்,

சீன-ஆசியான் பொருட்காட்சி கடந்த 20 ஆண்டுகளில் நிறைய சாதனைகளைப் பெற்றுள்ளது. இக்காலத்தில் இருதரப்பு வர்த்தக தொகை 16.8 மடங்கு அதிகரித்துள்ளது. உலகளவில் இப்பிரதேசத்தின் மொத்தப் பொருளாதார அளவு வகித்த விகிதம், 6.1 விழுக்காட்டிலிருந்து 21.5 விழுக்காடாக உயர்ந்துள்ளது. 200 கோடிக்கு மேலான மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளது. சீன-ஆசியான் உறவு, ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் மிக வெற்றிகரமான மாதிரியாக மாறியுள்ளது என்றார்.

புதிய கட்டத்தில், சீனா, ஆசியான் நாடுகளுடன் இணைந்து, மேலும் நெருக்கமான சீன-ஆசியான் பொது எதிர்கால சமூகத்தை கட்டியமைப்பதற்கும், பிரதேச மற்றும் உலக வளர்ச்சிக்கும் பங்காற்றும் என்று அவர் தெரிவித்தார்.