புதிய திறப்பு பொருளாதார அமைப்பு முறை கட்டுமானத்தை முன்னெடுக்கும் சீனா
2023-09-20 19:28:00

புதிய வளர்ச்சி நிலைமையை உருவாக்குவதற்குத் துணை புரியும் விதம், மேலும் உயர்நிலை புதிய திறப்பு பொருளாதார அமைப்பு முறையின் கட்டுமானத்தை சீனா முன்னெடுக்கும் என்று சீன அரசவையின் செய்தி அலுவலகம், 20ம் நாள் நடத்திய கொள்கைகள் குறித்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணை தலைவர் இக்கூட்டத்தில் கூறுகையில், ஆகஸ்ட் திங்கள் முதல், உலக பொருளாதாரத்தின் மந்தநிலை, உள்நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பு தொடர்பான முரண்பாடு முதலிய சவால்களை எதிர்நோக்கும் போக்கில், பல்வேறு நிலை வாரியங்கள், தொகுதியான கொள்கைளை வெளியிட்டுள்ளன. இவை, சீன பொருளாதார மீட்சி போக்கிற்கு நிதானம் மற்றும் நம்பிக்கை அதிகரித்து, அபாயங்களைத் தடுக்கின்றன. தற்போது, சீனா மீது எதிர்பார்ப்பைக் குறைத்து மதிப்பிட்ட வெளிப்புற சக்திகள் அதிகம். ஆனாலும், இத்தகைய மதிப்பீடு, முன்பு நனவாகவில்லை. எதிர்காலத்திலும் அது நனவாகாது என்று சுட்டிக்காட்டினார்.