© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
2022ம் ஆண்டில் சீன எண்ணியல் பதிப்பகத் தொழிலின் மொத்த வருமானம், 1 இலட்சத்து 35 ஆயிரத்து 869.9 கோடி யுவானை எட்டி, முந்தைய ஆண்டில் இருந்ததை விட 6.46 விழுக்காடு அதிகரித்தது என்று 13வது சீன எண்ணியல் பதிப்பகப் பொருட்காட்சியில் தெரிவிக்கப்பட்டது.
சீனச் செய்தி பதிப்பக ஆய்வகம் செப்டம்பர் 20ம் நாள் வெளியிட்ட 2022-2023 சீன எண்ணியல் பதிப்பகத் தொழிலின் ஆண்டு அறிக்கையின்படி, 2022இல், சீனப் பாரம்பரிய புத்தகம் மற்றும் செய்தித்தாள்களின் எண்ணியல் வருமானம் அதிகரித்துள்ளது. இணைய இதழ், இ-புத்தகம், எண்ணியல் செய்தித்தாள் ஆகியவற்றிலிருந்து மொத்தம் 1049.1 கோடி யுவான் வருமானம் கிடைத்தது. இது, 2021ம் ஆண்டில் இருந்ததை விட 3.7 விழுக்காடு அதிகம். இருந்தாலும் இது, கடந்த 3 ஆண்டுகளில் மிக தாழ்ந்த அதிகரிப்பு வேகமாகும். அதனால், பாரம்பரிய செய்தி பதிப்பக நிறுவனங்கள், தங்கள் அளவு மற்றும் வளர்ச்சி ஆற்றலை உயர்த்த வேண்டும் என்பது தெரிய வந்துள்ளது.