ஐ.நா பொது பேரவையின் 78ஆவது அமர்வின் பொது விவாதம் துவக்கம்
2023-09-20 15:47:47

78-வது ஐ.நா. பொது பேரவையின் கூட்டத்தொடரின் பொது விவாதம் 19ஆம் நாள் நியூயார்க்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் துவங்கியது. தொடரவல்ல வளர்ச்சியை முன்னெடுப்பது, காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பது, தீவிரமாகி வரும் பாதுகாப்பு நிலைமையைத் தணிவுபடுத்துவது, ஐ.நா. சபையின் சீர்திருத்தத்தை முன்னேற்றுவது முதலிய சர்வதேச பொது அக்கறை கொண்ட முக்கிய பிரச்சினைகள் குறித்து, பன்னாட்டுத் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் உயர் நிலைப் பிரதிநிதிகள் சொந்த நாட்டின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தி தீர்வு திட்டங்களை முன்வைத்தனர்.

ஐ.நா தலைமை செயலாளர் குட்ரேஸ் அதில் உரைநிகழ்த்துகையில், உலகம் நிதானமற்றதாக மாறி வருகிறது. அமைதியும் பாதுகாப்பும் முன்பு கண்டிராத அழுத்தத்தைச் சந்தித்து வருகிறது. அரசியல் விளையாட்டுத்தனம் மற்றும் தேக்க நிலைக்கு மாறாக, அரசியல் ஞானம் தான் உலகத்துக்கு தேவைப்படுகின்றது என்றார்.