ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்கள் கிரிக்கெட் போட்டி தொடக்கம்
2023-09-20 15:00:19

ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் பெண்கள் கிரிக்கெட் போட்டி 19ஆம் நாள் தொடங்கியது. இந்தோனேசிய மற்றும் மலேசிய அணிகள் கால் இறுதி சுற்றுக்கு முன்னேறின.

மொத்தமாக 9 பெண்கள் கிரிக்கெட் அணிகள் ஹாங்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியிட பங்கெடுத்துள்ளன. சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டி20ஐ போட்டியில் முன்னணியில் உள்ள இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் மற்றும் தாய்லாந்து நேரடியாக கால் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. அடுத்தபடியாக, மங்கோலியா மற்றும் சீனாவின் ஹாங்காங் அணிகளுக்கிடையில் 20ஆம் நாள் கால் இறுதிச் சுற்றுக்கான கடைசி தகுதி பெற போட்டியிடப்பட்டவுள்ளது.