சீக்கிய தலைவர் படுகொலை சம்பவம் பற்றிய இந்தியாவின் பதில்
2023-09-20 13:44:58

சீக்கிய தலைவர் ஒருவர் இவ்வாண்டு ஜுன் திங்களில் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டது காரணமாக, இந்தியாவின் உயர் தூதாண்மை அதிகாரி ஒருவர் கனடாவிலிருந்து வெளியேற்றப்பட்டதாக கனடா அரசு 18ஆம் நாள் அறிவித்தது. இதற்குப் பதிலடி அளித்த இந்திய அரசு, கனடாவின் உயர்நிலை தூதாண்மை அதிகாரி ஒருவரை 5 நாட்களுக்குள் இந்தியாவிலிருந்து வெளியேற்றுமாறு 19ஆம் நாள் உத்தரவிட்டுள்ளது. மேலும், கனடாவின் குற்றச்சாட்டு அபத்தமானது என்றும், இதற்கு ஆதாரம் ஏதுமில்லை என்றும் இந்தியா தெரிவித்தது.

கனடா தூதாண்மை அதிகாரிகள், இந்திய உள்விவகாரத்தில் தலையிட்டு, இந்தியாவுக்கான எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்து கொள்வது பற்றிய மத்திய அரசின் அதிருப்தியை இந்த முடிவு வெளிப்படுத்தியுள்ளது என்று இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.