விடியோ கேம்ஸ் நிகழ்ச்சி தயாரிப்பு பற்றிய வரையறை
2023-09-20 19:41:59

தொடர்புடைய வாரியங்களின் அங்கீகாரம் பெற்று, ஹாங்ச்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் விடியோ கேம்ஸ் நிகழ்ச்சி தயாரிப்பு பற்றிய வரையறையை சீன ஊடகக் குழுமம் செப்டம்பர் 20ஆம் நாள் வெளியிட்டது. சீனாவின் முதல் விடியோ கேம்ஸ் நிகழ்ச்சி தயாரிப்பு பற்றிய வரையறை இதுவாகும்.

19ஆவது ஆசிய விளையாட்டுப் போட்டி செப்டம்பர் 23ஆம் நாள் ஹாங்ச்சோ நகரில் நடைபெறவுள்ளது. விடியோ கேம்ஸ் போட்டி, அதிகாரப்பூர்வமான போட்டியாக மாறியுள்ளது, இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியின் தனிச்சிறப்பாகும்.

சீன ஊடகக் குழுமத்தின் தேசிய விடியோ கேம்ஸ் போட்டி வளர்ச்சி ஆய்வகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் கூறுகையில்,

இவ்வாய்வகம், மேம்பாடு, அறிவியல், நியாயம் முதலியவற்றைப் பின்பற்றி, இவ்வரையறையை வகுத்தது. ஹாங்ச்சோ ஆசிய விளையாட்டுப் போட்டியின் விடியோ கேம்ஸ் போட்டி நிகழ்ச்சி தயாரிப்பின் தொழில் நுட்பத்திற்கு இவ்வரையறை உத்தரவாதம் அளிக்கும் என்றார்.