18ஆது சீன-ரஷிய நெடுநோக்குப் பாதுகாப்புக் கலந்தாய்வு
2023-09-20 11:08:54

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழு உறுப்பினரும், வெளியுறவு விவகார ஆணையத்தின் அலுவலக இயக்குநருமான வாங்யீ, ரஷிய கூட்டமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் பட்ருஷேவ் ஆகியோரின் தலைமையில் செப்டம்பர் 19ஆம் நாள் 18ஆவது சீன-ரஷிய நெடுநோக்கு பாதுகாப்புக் கலந்தாய்வு நடைபெற்றது. இரு நாடுகளின் நெடுநோக்கு ஒத்துழைப்புகளை விரிவாக்குவது பற்றி இரு தரப்பும் கருத்துக்களை ஆழமாகப் பரிமாறிக் கொண்டு ஒருங்கிணைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கையை அதிகரித்துள்ளன.

சீன-ரஷிய நெடுநோக்கு நிலைப்புத் தன்மைக் கலந்தாய்வை உரிய நேரத்தில் நடக்கவும், சட்ட அமலாக்க பாதுகாப்பு, புதிய அறிவியல் தொழில்நுட்ப ரீதியில் உலக நிர்வாகம் உள்ளிட்ட துறைகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் இரு தரப்பும் ஒப்புக்கொண்டுள்ளன.

மேலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, பிரிக்ஸ் அமைப்பு முறை உள்ளிட்ட பலத்தரப்புக் கட்டுக்கோப்பு கீழ் உள்ள ஒத்துழைப்புகளை இரு தரப்பும் தொடர்ந்து வலுப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.