வாகனச் சந்தையில் ஐரோப்பா சுயநம்பிக்கையுடன் நியாயமான போட்டியை எதிர்கொள்ள வேண்டும்
2023-09-20 10:31:53

சீனாவின் மின்சார வாகனங்கள் மீது மானிய எதிர்ப்பு ரீதியிலான விசாரணை மேற்கொள்ள தொடங்குவதாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் சமீபத்தில் அறிவித்தார். இது குறித்து, ஐரோப்பாவின் உள்புறத்தில் தீவிர விவாதம் நடத்தப்பட்டு வருகின்றது.  குறிப்பாக, இந்த முடிவு, சுங்க வரிச் சிக்கலை ஏற்படுத்தி, சொந்த நாட்டின் வாகன தொழிற்துறையின் நீண்டகால நலன்களைப் பாதிக்கும் என்று ஜெர்மனியின் வாகனத்துறை கவலை தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஆணையத் தலைவர்  அறிவித்த இந்த முடிவு குறித்து ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய இரண்டு நாடுகளிடையே கருத்து வேறுபாடு நிலவுகிறது. பிரான்ஸ் அரசு மற்றும் பிரான்ஸ் வாகனத் தொழில்துறை  ஐரோப்பிய ஒன்றியம்  தொடர்புடைய கொள்கைகளை உருவாக்குவதற்கு ஆதரவு தெரிவிக்கின்றன. ஆனால், ஜெர்மனி வாகனத் தொழிற்துறை அதை தெளிவாக எதிர்க்கிறது. ஜெர்மனி நாட்டின் விர்ட்ஷாஃப்ட்ஸ்வோசெ என்று பொருளாதார வார இதழ் வெளியிட்ட கட்டுரையில், அரசியல் காரணமாகவே, சீன மின்சார வாகனங்கள் மீது விசாரணை தொடங்கப்பட்டது என்று தெரிய வந்துள்ளது.

உண்மையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் வாகன சந்தையில், தற்போதுவரை சீனாவின் மின்சார வாகனங்கள் சுமார் 8 விழுக்காடு மட்டும் வகிக்கிறது. இந்த விகிதம் அதிகமில்லை. குறிப்பாக, ஐரோப்பிய சந்தையில் சீன மின்சார வாகனங்களின் விலை, உள்நாட்டின் விலையை விட உயரவாக உள்ளது. எனவே, சீனாவின் மின்சார வாகனங்கள் மீது  ஐரோப்பிய ஒன்றியம் மானிய எதிர்ப்பு ரீதியான விசாரணை  நடத்துவதற்கு அடிப்படை ஆதாரமில்லை.

நீண்டகாலமாக,  ஐரோப்பிய வாகன தொழில்நிறுவங்களைப் பொறுத்த வரை, சீனா முக்கிய சந்தையாகும். சீனச் சந்தையில் இந்த வாகன தொழில் நிறுவனங்கள் நியாயமான போட்டியை கண்டுள்ளது. சீனச் சந்தையில் இருந்து நிலையான மற்றும் பெரிய நலன்களைப் பெறுவதை  இது உறுதி செய்துள்ளது. தற்போது, சீனாவின் மின்சார வாகனங்களின் வளர்ச்சியை எதிர்கொண்டபோது, ஐரோப்பா ஒரே மாதிரியான முறையில் செயல்பட முடியாதது ஏன்? மானிய எதிர்ப்பு ரீதியிலான விசாரணை மேற்கொண்டு வர்த்தக பாதுகாப்புவாதத்தை நடைமுறைப்படுத்துவது, நியாயமான கோட்பாட்டை மீறியதோடுஐரோப்பிய ஒன்றியம் எப்போதும் பின்பற்றி வரும் சுதந்திரமான வர்த்தக கருத்தைப் புறக்கணித்துள்ளது.

ஐரோப்பா, உலகளவில் முக்கிய வாகன தயாரிப்புத் தளமாக திகழ்கிறது. வணிக அடையாளச் சின்னம், திறமைசாலிகள், தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் பெரிய சாதகங்களை கொண்டுள்ளது. வெளிப்புறத்தில் இருந்து போட்டியை சந்திக்கும் போது, ஐரோப்பா சுயநம்பிக்கை  மற்றும் திறந்த மனதுடன் செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.