இவ்வாண்டின் முதல் 8 திங்களில் சீனாவின் நேரடி முதலீட்டுத் தொகை அதிகரிப்பு
2023-09-21 19:00:04

சீன வணிகத் துறை அமைச்சகம் 21ம் நாள் வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை, வெளிநாடுகளில் சீனாவின் நிதியற்ற நேரடி முதலீட்டுத் தொகை, 58 ஆயிரத்து 561 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 18.8 விழுக்காடு அதிகரித்தது. அதில், ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பங்கெடுத்த நாடுகளில், சீனத் தொழில் நிறுவனங்களின் நிதியற்ற நேரடி முதலீட்டுத் தொகை, 14 ஆயிரத்து 37 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 22.5 விழுக்காடு அதிகரித்தது.

இக்காலக்கட்டத்தில், உடன்படிக்கை மூலம் மேற்கொண்ட வெளிநாட்டுத் திட்டப்பணியின் வர்த்தகத் தொகை, 64ஆயிரத்து 862 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டில் இருந்ததை விட 6.1 விழுக்காடு அதிகரித்தது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தில் பங்கெடுத்த நாடுகளுடனான உடன்படிக்கை மூலம், மேற்கொள்ளப்பட்ட திட்டப்பணிகளின் வர்த்தகத் தொகை, 52 ஆயிரத்து 952 கோடி யுவானை எட்டி, கடந்த ஆண்டில் இருந்ததை விட 4.8 விழுக்காடு அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.