சர்வதேச கப்பல்களின் போக்குவரத்தின் முழுமையான மீட்சி
2023-09-21 08:50:24

சீனச் சரக்கு மற்றும் போக்குவரத்து அமைச்சகத்திலிருந்து 19ஆம் நாள் கிடைத்த தகவலின் படி, சீனாவின் உள்நாட்டு துறைமுகங்களுக்குச் சர்வதேசப் பயணக் கப்பல் போக்குவரத்து முழுமையாக மீண்டும் தொடங்கப்படுகின்றது.

சர்வதேச பயணக் கப்பல்களில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள், நீண்ட பயண நேரம், அவசர சூழ்நிலை சமாளிப்புக்கான அதிக தேவைகள் ஆகியவற்றால், மீண்டும் தொடங்குவதற்கான பல்வேறு ஆயத்தப் பணிகளைப் பயனுள்ள முறையில் மேற்கொள்ள வேண்டும் என்று இந்த அமைச்சகத்தின் தொடர்புடைய பொறுப்பாளர் ஒருவர் கூறினார்.