சீன ஊடகக் குழுமத் தலைவர்-சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி துணை தலைவர் சந்திப்பு
2023-09-21 20:12:15

சீன ஊடகக் குழுமத் தலைவர் ஷென் ஹாய்ஷியொங் செப்டம்பர் 21ம் நாள் பெய்ஜிங்கில், ஹாங்ச்சோ ஆசிய விளையாட்டுப் போட்டிக்காக வந்தடைந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் துணை தலைவர் சாமரன்ச் தலைமையிலான குழுவினர்களைச் சந்தித்துரையாடினார். இருத்தரப்பினரும், புதிய விளையாட்டுகளின் பரவல், ஹாங்ச்சோ ஆசிய விளையாட்டுப் போட்டி, பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி, 2025ம் ஆண்டு செங்து உலக விளையாட்டுப் போட்டியின் ஒளிப்பரப்பு முதலியவை பற்றி கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.

ஷென் ஹாய்ஷியொங் கூறுகையில், சாமரன்ச், சீனாவின் விளையாட்டு இலட்சியத்துக்கு ஆக்கமுள்ள பங்கு ஆற்றியுள்ளார். கடந்த சில ஆண்டுகளில் விளையாட்டுப் போட்டிக்கான சீன ஊடகக் குழும ஒளிப்பரப்பின் சர்வதேசச் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. தற்போது சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த சுமார் 4500 பணியாளர்கள், ஹாங்ச்சோ ஆசிய விளையாட்டுப் போட்டி பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை அடிப்படையாகக் கொண்டு, பாரிஸ் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில், ஒலிம்பிக் எழுச்சியை மீண்டும் உலகிற்குக் காண்பிப்போம் என்று தெரிவித்தார்.

சீன ஊடகக் குழுமத்தின் துணை தலைவர் ஷிங்போ அம்மையார், இச்சந்திப்பில் கலந்து கொண்டுள்ளார்.