சீன விண்வெளி நிலையத்திலிருந்து 4ஆவது முறை அறிவியல் வகுப்பு
2023-09-21 19:51:47

டியன் குங் என்ற சீனாவின் விண்வெளி நிலையத்தில் 4ஆவது முறை வகுப்பு 21ஆம் நாள் மேற்கொள்ளப்பட்டது. ஆசிரியர்கள் மற்றும் விண்வெளி வீரர்களுமான ஜிங் ஹெய்பங், ஜு யாங்ச்சு, குய் ஹெய்சாவ் ஆகியோர், இளைஞர்களுக்கு தலைசிறந்த விண்வெளி அறிவியல் வகுப்பை வழங்கினர். மங் டியன் என்ற ஆய்வு கலனில் வகுப்பு அளிப்பது முதல்முறையாகும். இந்த வகுப்பு வெற்றி பெற்றது.

சீனாவின் பெய்ஜிங், உள்மங்கோலியா, ஷென்சீ, அன்ஹுய், சேச்சியாங் ஆகிய இடங்களில் 5 வகுப்பறைகள் அமைக்கப்பட்டன. சுமார் 2800 மாணவர்கள் இவ்வகுப்பில் கலந்துகொண்டனர். சீன ஊடகக் குழுமம், நேரலை மூலம் இவ்வகுப்பை முழுமையாக ஒளிப்பரப்பியது குறிப்பிடத்தக்கது.